நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

அள்ளி அமுக்கினால் அல்ப ஆயுசு



சாப்பிடுவதில் அவசரமே பட கூடாது. உண்ணும் உணவுக்குத்தக்கப்படி, இரப்பை நீர் ( என்சைம் ) மெல்ல மெல்ல சுரந்து ஜீரணத்தை தொடங்க அவகாசம் தேவை அல்லவா?  ஆழ்துளை கிணறா நீரை பீய்ச்சி அடிக்க? இல்லை , இது ஊற்று உயிர் திசுக்களின் ஊற்று.  உணவை பற்றிய எண்ணத்திலேயே மெல்ல மெல்ல கரைத்து விழுங்க வயிறு சிறுக சிறுக இடம் கொடுத்து விரிவடைந்து உணவை ஏற்றுக்கொள்ளும்.  இரண்டு நிமிடத்தில் நான்கு கவளத்தை அமுக்கி விட்டு ஓடினால் வயிறு திடீர் தாக்குதலினால் அதிர்ச்சி அடைந்து தாங்கி கொள்ள முடியாத மறுப்பு உணர்வு ஏற்படும்.  பிறகு வாந்தி தான்.  செரியாமை, வயிரின் ஒத்துழையாமை இன்னபிற சங்கடங்கள் தான்.  இறுதியில் ஆயுள் குறைவு.
அவசரமாக விழுங்குவது அவசரமான ஆயுள்.  அரைகுறை வாழ்க்கை.  அவசரமாக ஓடுவதற்க்கா பிறந்தோம்?  வயிறு பெருத்தால் வாழ்வு சுருங்கி விடும் எச்சரிக்கை.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் "நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்" என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

0 comments:

Post a Comment