நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday, 26 July 2016

உண்ணா நோன்பே உயரிய மருந்து



உடல்நிலைக்கு எவ்வித சின்னஞ்சிறு உபாதை நேர்ந்தாலும், அந்த ஒருநாள், அல்லது அடுத்துவரும் ஒரு வேளை உணவை தவிர்த்து உண்ணாமை மேற்கொண்டு, குடலுக்கு ஒய்வுக் கொடுத்து விட்டால், உடலில் ஓடும் முழு அளவு ரத்தமும் நோயை விரட்டி அடிக்கப் போராடி வெற்றி பெற்றுவிடும்.  உணவையும் போட்டு அடைத்துக் கொண்டால் பாதி ரத்தம் செரிமானத்திற்கு மாற்றம் செயிதது போக, மீதமுள்ள ரத்த ஓட்டத்தால் உடல் பழுதை நீக்கிக் கொள்ள முடியாது போகும்.  அல்லது இரண்டு மடங்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.  உணவு கொள்ளாமல் ஒரு மணி நேரத்தில் சரி செய்து கொள்ளுவது எப்படி, உணவு உட்கொண்டு இரண்டு மணி நேரம் சிரமப் படுவது எப்படி? அதற்காகத்தான் வாயை கட்டி நோயை கட்டு என்று சொன்னார்கள்.  நோய் வந்த பிறகு உண்ணாநிலை மேற்கொள்ளுதல் என்பதை விட, வாரம் ஒருமுறை, ஒருநாள், உண்ணாநோன்பு இருந்து, அவ்வப்போது உடலை "சர்விஸ்" செய்து கொள்வது சாலசிறந்தது.  ஆக உண்ணா நோன்பு என்பது உயிர் வாழும் நோன்பு...!!
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

0 comments:

Post a Comment