காலை வெய்யில் பாலுக்கு சமம்
தாய்ப்பால் என்பது வளரும் குட்டிகளுக்கு தன் ரத்தத்தையே உணவாக கொடுப்பது. கர்ப்பப்பையில் ரத்தம் மூலம் உணவு கொடுத்தது போல, பிறந்தவுடன் ரத்தம் பாலாக மாற்றப்பட்டு இளம் பிஞ்சுகளுக்கு கொடுக்கபடுகிறது. இயற்கையின் இரகசியம் இது. என்னதான் முயன்றாலும் இயற்கைப்பாலை தயாரித்து விட முடியாது. அதனால்தான் உடலுக்கு வேண்டிய சத்து முழுவதும் பாலில் இருப்பது போல, உடல் இயக்க சக்தி முழுவதும் (வைட்டமின் 'டி' உட்பட) காலை வெய்யிலில் இருக்கிறது என்பதை வற்புறுத்திச் சுட்டி காட்டத்தான் இந்த மருத்துவ பழமொழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். பிறந்த பிஞ்சு சிசுக்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் போல, பிறந்த உயிர்களுக்கு காலை சூரிய ஒளி அவசியம் என்பதை இதனை விடத் தெளிவாகச் சுட்ட முடியாதல்லவா..!!
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது
0 comments:
Post a Comment