நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday, 26 July 2016

விருந்தாகவே உண்பவர்களுக்கு மருந்து தான் போக்கிடம்


குறிப்பிட்ட உணவு என்று இல்லாமல், நாக்குக்கு லஞ்சம் கொடுக்கும் உணவாகவே தினந்தோறும் விழுங்கி வருபவர்களுக்கு நோய் வரத்தான் செய்யும்.  மருந்து தான் தீர்வு.  இது முதல் கட்டம்.  மருந்து எடுத்துக்கொள்வதை விட விருந்தால் தான் இந்த கேடு நேர்ந்தது என்று தெரிந்த பிறகு, விருந்தை நிறுத்துவது புத்திசாலித்தனம்.  விருந்தும் மருந்தும் 3 நாளைக்கு என்பார்கள்.  மூன்று நான் என்ன, ஆண்டு முழுவதும் விருந்தாகவே விதவிதமாக உண்டு வருபவர்கள், நிரந்தர நோயாளிகள்தான் என்பதை சற்றே கவலையோடு எண்ணிப்பார்க்க வேண்டும்.  நோய் வரும் வரை கொண்டாட்டம்தான்.  வந்த பின் திண்டாட்டம் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டும்.
அதிலும் அன்றாட வீட்டு சமையல் வேறு விருந்துக்காக சமைக்கும் முறை வேறு விருந்துக்காக சமைக்கும் முறை வேறு. ஆகையால் விருந்துணவை அளவுடன் வைத்து கொள்ள வேண்டும் உணவுக்கவர்ச்சி உடலை ஒழித்து விடும்.
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் "நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்" என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

0 comments:

Post a Comment