நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Monday 6 March 2017

தற்சார்பு மருத்துவம் - அறிமுகம்


வணக்கம்..! “என்ன இது தற்சார்பு மருத்துவம்” என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்த கட்டுரையின் முடிவில் அதற்கான விடையை என் பார்வையில் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். மனித உடல் என்பது பல லட்சம் பரிணாம வளர்ச்சியின் உச்சம். குறிப்பாக மனித நரம்பு மண்டலம் மற்ற விலங்குகளை காட்டிலும் அபரிமிதமான வளர்ச்சி கொண்டது. இத்தகைய அற்புதமான ஒரு இயந்திரம் மேலும் ஒரு குறிப்பிட தகுந்த அம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது அதுதான் தன்னை தானே சரிசெய்து கொள்ளுதல். குறிப்பிட்ட சில உறுப்புகளை தவிர்த்து மனித உடலானது தனது அனைத்து செல்களையும் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பதில் நீங்கள் என்னுடன் உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு இருப்பின் ஏன் சிறுநீரகம் செயலிழப்பு, இருதய கோளாறு முதலியவை ஏற்படுகின்றன? வினோதம்…!
     உடலில் இன்னும் ஒரு அற்புதமான அமைப்பு உள்ளது அதுதான் தற்காப்பு அல்லது நோய் எதிர்ப்பு. என்னை பொருத்தமட்டில் இந்த தற்காப்பு அமைப்பிற்கு ஈடு இணை இல்லை. இதனால் எத்தகைய நோய் கிருமிகளையும் எதிர்த்து போராடி உடலை பாதுகாக்க முடியும். இருப்பினும், கேன்சர், எய்ட்ஸ், மலேரியா, டைபாய்டு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் மனித உடலை தாக்கி மரணத்தையும் விளைவிக்கின்றன. எப்படி இது சாத்தியம்?
    சரி, நோய் வந்தவுடன் நாம் அதற்காக சில மருந்துகளை சாப்பிடுகிறோம் அவை உண்மையில் நோயை குணப்படுத்துகிறதா? இந்த கேள்விக்கு நாம் “ஆம்” என்று பதில் சொன்னால், உடலை பற்றிய கவனமும், அடிப்படையும் நாம் மிகவும் குறைவாக கொண்டுள்ளோம் என்பதாகும்.
“இவ்ளோ பேசுறியே உனக்கு இதெல்லாம் தெரியுமா??”
என்று நீங்கள் கேட்பது எனக்கு தெளிவாக கேட்கிறது 🙂 .. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களின் ஒரு வாக்கியம்,
“If I have seen further, it is by standing on the shoulders of giants”
– Albert Einstein
தமிழில்,
“எனது தற்போதைய கண்டுபிடிப்புகளுக்கு காரணம் எனது முன்னோர்களின் முந்தைய கண்டுபிடிப்புகள்”
“ரைட்டு ஓகே, ஆனா இத ஏன் எங்ககிட்ட சொல்ற??”
     உங்கள் குரல் மீண்டும் தெளிவாக கேட்கிறது 🙂 . நாம் அனைவரும் நம் வாழ்வில் பல விசயங்களை கற்கிறோம். அதை நம்மோடே வைத்துவிட்டோம் எனில் நம் அடுத்த தலைமுறை மீண்டும் ஆரம்ப புள்ளியில் இருந்து தொடர வேண்டி இருக்கும். நீங்கள் கற்றது, சோதித்தது, உணர்ந்தது, புரிந்தது மேலும் உலகத்தின் மீதான உங்கள் பார்வையை ஆவணப்படுத்துங்கள். உங்கள் தலைமுறை உங்கள் முடிவில் இருந்து தொடங்கட்டும். ஆகையால் சொத்து சேர்பதுடன், அறிவு செல்வத்தையும் சந்ததிக்கு கொடுக்க முயற்சிப்போம்.
     பீடிகை போட்டது போதும் விசயத்துக்கு வருவோம். இந்த தொடர் பதிவில் உடல் & மருத்துவம் பற்றி நான் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர விரும்புகிறேன். என்னுடைய இந்த தேடலில் பல வியப்பான உண்மையை அறிந்ததுடன் அவற்றை நான் என்மேல் சோதனையும் செய்து பார்த்து உணர்திருக்கிறேன்.
“அதெல்லாம் இருக்கட்டும் இந்த கட்டுரையை நான் ஏன் படிக்கணும்??”
— உங்கள் Health Insurance ரத்து செய்ய
— உடல் ஆரோக்கியத்துடன் வாழ
— நோய் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ
“இந்த மாதிரி சொல்றவன்களாம் ஒரு சாதாரண ஜுரத்தை கூட உடனடியாக சரி செய்ய மாட்டாங்க”
— சாதரண ஜுரம் மட்டும் அல்லாமல் கேன்சர், மலேரியா, அனைத்து விதமான வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் மற்றும் பல நோய்களிலிருந்து தேறுவதற்க்கான நான் அறிந்து கொண்ட வழிமுறைகளை இங்கேப் பகிர உள்ளேன்.
     அது மட்டும் அல்லாமல், உடலின் அடிப்படை செயல்பாடுகளை பற்றியும் ஆராய்ந்து பகிர உள்ளேன். நான் இங்கு பகிரப் போகின்ற தகவல்கள் பல, நூல்களின் மூலம் நான் கற்றது.  இந்த தொடர் பதிவு, வெறும் பதிவாக மட்டும் அல்லாமல், அனைவரின் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் விதமாக அமையும் என நம்புகிறேன்.
– மருத்துவம் தொடரும்

0 comments:

Post a Comment