நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 7 March 2017

தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 1 - சமநிலை


ஆரோக்கியம் என்பது உடலின் சமநிலையை பொருத்தது.  பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே சமநிலையில் இருப்பதால்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.  அதேபோன்று நம் உடலிலும் ஒரு மாபெரும் பிரபஞ்சம் உயிர்ப்போடு இயங்கி கொண்டிருக்கிறது.  உடலின் சமநிலை பாதிக்கும் போது நம் உடலில் உள்ள பிரபஞ்சமும் தன் சமநிலையை இழக்கிறது, விளைவு, நோய் தொற்று, சோர்வு, சிந்தனை தேக்கம், உடல் எடை அதிகரிப்பு, உடல் வலி, செரிமான கோளாறு போன்ற மேலும் பல பிரச்சனைகள் உருவாகின்றன.


நவீன வாழ்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் நமது உடல் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கின்றன.  இதன் விளைவாக நீரிழிவு, புற்று நோய் மற்றும் இருதய கோளாறு போன்றவை நமக்கு பாரிசாக கிடக்கிறது.  தமிழ் நாட்டில் இந்த மூன்று நோயிகளும் மிக பிரபலம்.  இதற்க்கு உணவை மட்டும் குறை சொல்வது சரியாகாது அதற்க்கு பின் உள்ள உணவு அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும்.  


நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம்.  அனால் நாம் இறக்கும் வரை ஆரோக்கியத்துடன் உயிர்ப்போடு வாழ நம் அனைவருக்கும் உரிமை உள்ளது.  சரி விசயத்திற்கு வருவோம்.  நீங்கள் எத்தகைய ஆரோக்கிய சீர்கேட்டில் இருந்தாலும் சரி.  உங்களுக்கு எத்தகைய வியாதிகள் இருந்தாலும் சரி.  உங்கள் கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரையின் அளவு, ஹோர்மோன் பிரச்சனை மேலும் வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் அனைத்தையும் மறந்துவிடுங்கள்.  ஆம்..! உடனே மறந்து விடுங்கள்.  நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே ஒரு அம்சம் உங்கள் உடலின் அமில கார (pH) சமநிலை மட்டுமே…!

அது என்ன அமில கார சமநிலை? கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அமிலம் மற்றும் காரத்தின் அளவீடானது 0 தில் இருந்து 14 வரை இருக்கும்.  ஒரு திரவத்தின் pH (அமில கார செறிவு) அளவு 7 ஆக இருந்தால் அது ஒரு நடுநிலை திரவம்.  அதாவது அந்த திரவம் அமிலமும் அல்ல காரமும் அல்ல.  மாறாக pH மதிப்பு 7 க்கு கீழே இருந்தால் அந்த திரவம் ஒரு அமிலம்.  அதுவே 7 க்கு மேலே இருந்தால் அது ஒரு காரம்.  

நம் உடலிலும் இந்த அமில கார செறிவானது (pH) உள்ளது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான pH மதிப்பை கொண்டிருக்கும். இவை அனைத்திலும் முக்கியமானது ரத்தத்தின் pH அளவு ஆகும்.  ஆரோக்கியமான உடலில் ரத்தத்தின் pH ஆனது 7.3 இலிருந்து 7.4 என்ற அளவில் இருக்கும்.  நமது உடலின் வெப்பநிலை எவ்வாறு சமநிலையில் உள்ளதோ அந்த அளவிற்கு நமது ரத்தத்தின் pH சமநிலையில் இருக்கவேண்டும்.  இதில் ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும் நமது உடல் சமநிலையை நிலைநிறுத்த மிகவும் உச்சகட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.  எடுத்துகாட்டிற்கு, நமது எலும்பை உருக்கி அதைக்கொண்டு கார தன்மையை ரத்தத்தில் அதிகரிக்கும்.


“என்னப்ப காரம்னு சொல்ர அமிலம்னு சொல்ர pH னு சொல்ர இது என்ன அவ்ளோ important ஆ…??”


pH அளவானது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும், பல்வேறு விதமான சீரங்களையும் நேரடியாக பாதிக்கிறது.  மேலும் நம் உடலின் ஒட்டுமொத்த வளர்சிதைமாற்றமும் உடலின் காரத்தன்மையை பொறுத்தே அமைகிறது.  உடலின் அமிலத்தன்மை மிக மோசமான நிலையை அடைந்தால் செல்கள் அழிய தொடங்குகின்றன.  இந்நிலையை கவனிக்காமல் விட்டால் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் தடைபட ஆரம்பிக்கும்.  இதய துடிப்பு முதல் மூளையின் நரம்பு சமிக்ஞைகள் வரை பாதிக்கபடும். வேறு மாதிரி சொல்ல வேண்டுமானால் மரணம் சம்பவிக்கும்…!


இங்கு மோசமான நிலைமை என்னவென்றால் நாம் அன்றாடம் உண்ணும் இட்லி, பொங்கல், வடை, பரோட்டா, அரிசி, சாம்பார், சிக்கன், மட்டன், முட்டை மற்ற அனைத்து வேகவைத்த உணவுகளும் உடலுக்கு அமில தன்மையை தருகின்றன.  நம் உடல் சமநிலையை காக்க படாத பாடு பட்டுகொண்டிருக்கிறது.


“உடம்பு எல்லாத்தையும் தானே சரிபன்னிக்கும்னு சொல்ற, ஆனா ஒரு ஜுரம் வந்தா கூட தானே சரி ஆகமேட்டேன்குது”  போன்ற வரிகளை பலமுறை மக்கள் கூற கேட்டிருக்கிறேன்.  அவர்கள் மேல உள்ள பத்தியை இன்னொரு முறை படிக்க வேண்டுகிறேன்.


“ரைட்டு.. எதோ வைரஸ், பாக்டீரியா, மலேரியா, சிக்குன்குனியா, கேன்சர் அப்படின்லாம் first part ல சொன்னியே அது எங்க..?”


இதற்க்கான பதிலை சிறிது சிறிதாக அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


- மருத்துவம் தொடரும்

1 comment:

  1. அற்புதமான கண்டு பிடிப்பு. நல்லா இருக்கற உடம்பை நாம்தான் நோய்க்கு ஆளாக்குறோம். எந்த நோய் வந்தாலும் நம் உடலை ஆழ்ந்து நோக்குவதன் மூலம் சரி செய்யலாம்.இது தெரிந்தும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி கோடிகணக்கில் மருத்துவ தொழிலில் கொள்ளை அடிக்கின்றார்கள். பெரிய அரிய உண்மைகளை ஓசியில் தரும் உங்கள் சேவை தொடர வேண்டும். இறைவன் உங்களுக்கு நன்மை செய்வார்

    ReplyDelete