தற்சார்பு மருத்துவம் - அத்தியாயம் 2 - தற்காப்பு

அமில கார சமநிலை எவ்வளவு முக்கியம் என்றும், அதை உடல் சமநிலையில் வைக்க அதி தீவிர ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்றும் போன அத்தியாயத்தில் பார்த்தோம். அனால், உடலானது இந்த சமநிலையை ஏன் இவ்வளவு தீவிரமாக பேணிகாக்க வேண்டும்..? காரணம் உள்ளது.
நம் உடலானது பல கோடி செல்களை கொண்டு உருவாகி உள்ளது. ஒவ்வொரு செல்லும் உயிர்ப்புடன் இருந்தால்தான் நாம் உயிர்ப்போடு இருக்க முடியும். இதில் செல்களை உயிர்ப்புடன் பார்த்துக்கொள்வதில் ரத்தம் மிகப்பெரும் பங்கை வகிக்கிறது. முன்னரே நாம் பார்த்திருக்கிறோம் ரத்தமானது சற்று கார தன்மை கொண்டது (pH). எப்போது ரத்தமானது காரதன்மையில் இருந்து சற்று அமில தன்மையை அடைகிறதோ அப்போதுதான் உடலின் சமநிலை பாதிக்க ஆரம்பிக்கிறது. உடலானது இந்த அமில நிலையை மீண்டும் கார நிலைக்கு கொண்டுவர தனது அனைத்து முன்னேற்பாடுகளையும் முடுக்கி விடுகிறது. ஆரம்பத்தில் நமக்கு இதைபற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஒரு கட்டத்தில் உடலானது வெளிப்படையான சில அறிகுறிகளை வெளியிட ஆரம்பிக்கிறது. தலைவலி, தோல் பிரச்சனைகள், அலர்ஜி, ஜலதோஷம், ஜுரம் போன்றவை ஆரம்ப அறிகுறிகள். நாமோ இதை வியாதி என்று நினைத்து மருந்து சாப்பிட்டு அந்த அறிகுறிகளை நிறுத்திவிடுகிறோம். உண்மையில் நாம் நம் உடலை அதன் வேலையை செய்ய விடாமல் தடுத்திருக்கிறோம்.
ஒரு கட்டத்தில் இந்த அமில நிலை இன்னும் மோசமாக போகும்போது மிக மோசமான நிலைமை உருவாகிறது. தைராய்டு, அட்ரினல், கல்லீரல் மேலும் பல உள்ளுறுப்புகள் தனது உச்சகட்ட திறனை விட மிக மிக குறைவாக செயல் பட ஆரம்பிக்கிறது. அமில நிலை இன்னும் மோசமாக போனால், உடலின் பிராணவாயுவின் அளவு குறைய தொடங்கும். வளர்சிதை மாற்றம் தடைபடும், செல்கள் இறக்க தொடங்கும். உடல் மரணத்தை நோக்கி வேகமாக நகரும்.
“அதான் உடம்பு இதெல்லாம் தானா பாதுக்குமே அப்பறம் என் இந்த பிரச்சன வருது..?”
ஆம், உடல் சமநிலைக்கான முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்கிறது. அமில நிலையை சமன் செய்ய, உடல் தன்னுள் சேமித்து வைத்திருக்கும் கார கனிமங்களான சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம் போன்றவற்றை எடுத்து அமில நிலையை சமன் செய்ய முயற்சிக்கிறது. ஒரு கட்டத்தில், இந்த கனிமங்கள் தீர்ந்தவுடன் உடலின் எலும்புகள், தசைகளில் இருந்து இவற்றை எடுத்து பிரச்சனையை சரி செய்கிறது. இந்த நிலையில்தான் நமக்கு உடலில் வைட்டமின்கள், கனிமங்கள் குறைபாடு ஏற்படுகிறது. மேலும் தொடக்க அறிகுறிகள் தோன்றுகின்றன.
இவை அனைத்தும் பிரச்சனையின் தொடக்கம் தான். ஒரு கட்டத்தில் கார கனிமங்கள் உடலில் தீர்ந்தவுடன், உடலானது அமில கழிவை வேறு வழி இல்லாமல் திசுக்களில் சேமிக்க தொடங்குகிறது. இந்நிலையில் நமது சிறுநீரகமும், கல்லீரலும் இதை சரி செய்ய அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்கிறது. இப்போது இந்த நிலைய சரிசெய்ய நம் வெள்ளை அணுக்கள் களத்தில் குதிக்கின்றன, இந்நிலையில் உடலில் (inflamatoin) வீக்கம், அழற்சி, தடிப்பு ஆகியவை உருவாகிறது.
மேலும் அமில நிலை அதிகரிக்கும் போது உடல் வேறு வழி இல்லாமல் அவற்றை உடலின் உள்ள இதயம், கணையம், கல்லீரல், நுரையீரல், மார்பு பகுதி, வயிற்றில், தொடையில், இடுப்பில், மூளையில் கொண்டு சேர்க்கிறது. இதற்க்கு பெயர்தான் முதுமையடைதல்…!
இந்த அமில பெருக்கம் நமக்குத்தான் பிரச்சனையே தவிர வேறு ஒருத்தருக்கு மிகவும் குதூகலமான விசயம். யார் என்று யோசிக்கிறீர்களா…? அவர் வேறு யாரும் இல்லை, நுண்ணுயிர்கள்தான்…! அதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக பார்ப்போம்.
- மருத்துவம் தொடரும்
0 comments:
Post a Comment