நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Tuesday 26 July 2016

மண் மூச்சு விட்டால்தான் மனிதன் மூச்சு விடமுடியும்


மண் மூச்சு விட்டால்தான் மனிதன் மூச்சு விடமுடியும்

மண் என்பது உயிர் உள்ளது.  அது உயிருடன் இருந்தால்தான், நாம் மட்டும் என்ன, உலக உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ முடியும்.  ஆக மண் நம் தாய்.  தாய் வளமாக இருந்தால்தான், சேய்கள் செழிப்பாக வாழ முடியும்.  மண்ணை மதித்து, பராமரித்து வாழ்பவர்களுக்கே மண், மாண்பு கொடுக்கும்.  மண்ணை மலடாக்கினால், மக்களிடமும் மலடு பெருகத்தான் செய்யும்.
மண்ணிலே அடங்கி இருக்கிறது கோடிக்கணக்கான சிற்றுயிர்கள்.  ஒரு ஏக்கரில் 4 லட்சம் மண்புழுக்கள் இருக்கும்.  அனைத்து சிற்றுயிர்களும் உணவு, இலை, தழை, மக்கிய உரங்கள், கால்நடைக் கழிவுகளை உணவாகக் கொண்டு, மண் உயிர் வளர்க்கிறது.  கால்நடைகளுக்கு உணவு இலை, தழை, புல், பூண்டுகளே! இவைகளை உண்டு, மண்ணுக்கு வேண்டிய உணவைத் தள்ளுகிறது.  அதனை உண்ட மண், மீண்டும் பயிர் பச்சை விளைவிக்கிறது.  இவைகளை உண்ட கால்நடைகள், பூமிக்கு வேண்டிய உணவு கொடுக்கிறது.  இதுதான் வாழ்க்கை சக்கரம்.  இதில் இடையில் அறுவடை செய்து கொள்பவன் மனிதன்.  ஆக மனிதனுக்கான உணவும், வாழ்வும் வேண்டும் என்றால் மண்ணும், கால்நடைகளையும் கட்டாயம் என்றாகிறது.  கட்டாயங்களில் ஒன்றை இழந்தாலும் மனிதன் உயிர் வாழ முடியாது.  இந்த நிலையில் பலர் மண்ணையும்  வெறுத்து, கால்நடைகளையும் வெறுத்து வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் மண்ணில் வாழவே உரிமை இல்லை என்றல்லவா ஆகியிருக்க வேண்டும்.  ஏதாகினும் ஒரு விதத்தில் இயற்கைக்கு உதவியாக, உறுதுணையாக இருப்பவர்களுக்கே இவ்வுலகில் வாழ உரிமை உண்டு என்பது போன்ற நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.  இதுதானே இயற்கையோடு இயைந்த மக்கள் அரசு.  எங்கோ தவறு இருக்கிறது.  சரி செய்து கொள்ள முயல வேண்டாமா?
மருத்துவர் அரியூர் காசிபிச்சை அவர்களின் “நோயற்ற வாழ்வுக்கான இருநூறு நுட்பங்கள்”என்னும் புத்தகத்திலிருந்து தொகுக்க பட்டது

0 comments:

Post a Comment